ஜெஸ்ட்-2015 நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய மற்றும் மாநில கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி/ ஒருங்கிணைந்த ஆராய்ச்சியில் கணினி அறிவியல் அல்லது நியூரோசயின்ஸ் படிப்பு வழங்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் உள்ள மத்திய, அரசு நிறுவனங்களில் பி.எச்டி படிப்பில் சேர ஜெஸ்ட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்வி தகுதியாக எம்.டெக்., எம்.எஸ்சி., இயற்பியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி / எம்.டெக்-பி.எச்டி படிப்புகளில் சேர அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பிஇ, பி.டெக் ஆகிய படிப்புகளில ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜெஸ்ட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு ஜெஸ்ட் இணையதளத்தை அணுகலாம்.