காரைக்கால் வானொலி நிலைய தற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

radio jacky

காரைக்கால் வானொலி நிலைய தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை) நிலைய உதவி இயக்குனர் சித்ரலேகா சுகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை 100.3) யில் தாற்காலிக அறிவிப்பாளராக பணியாற்ற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 50 வயதுக்கு மிகாதவராக, குறைந்தபட்சம் பட்டதாரி தகுதியுடையவராக, நல்ல குரல் வளம், கலை இலக்கியம் நாட்டு நடப்புகளில் ஆர்வம் உள்ளவராக இருப்பின் இந்த தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

 ஒரு முழு வெள்ளைத்தாளில் பெயர்,முழு முகவரி,தொலைபேசி எண் ,தங்களின் கலை இலக்கியம் தொடர்பான விபரங்கள்,வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகள் வழங்கி இருப்பின் அவை குறித்த விபரம், வயது,கல்வித்தகுதி, கணினி பயிற்சி போன்ற விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சான்றுக்கான நகல்களுடன் காரைக்காலிலிருந்து 15 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டும்  நிலைய இயக்குநர்,காரைக்கால் பண்பலை வானொலி நிலையம்,நேரு நகர்,காரைக்கால் 609 605 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 மேலும் குரல் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.300, எஸ்.சி,எஸ்.டி  பிரிவினர் ரூ.225 க்கான வங்கி வரைவோலை (ஈஈ) நிலைய இயக்குனர், ஆல் இண்டியா ரேடியோ,காரைக்கால் என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது அலுவலக நாள்களில் நிலையத்தில் நேரிலும் பணமாக செலுத்தி ரசீது பெற்று ரசீதினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கலாம்.வங்கி வரைவோலையின் நகல் குரல் தேர்வின் போது  சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டண சலுகை பெற உரிய சாதி சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும்.  விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி மாதம் 28 ம் தேதியாகும்

Leave a Reply