அஜித்தின் போட்டோஷூட்டால், அப்புக்குட்டிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
நடிகர், பைக் ரேஸர், கார் ரேஸர் என்ற அளவில் புகழ் பெற்றிருந்த அஜீத், சமீபத்தில் போட்டோகிராபராகவும் புகழ் பெற்று விளங்குகிறார். சமீபத்தில் அப்புக்குட்டி மற்றும் ஸ்ருதிஹாசனை அஜீத் எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வலம் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அஜீத்தின் பார்வை பட்ட காரணத்தினால்தானோ என்னவோ, அப்புக்குட்டிக்கு தற்போது சினிமா வாய்ப்பு பெருகி வருவதாகவும், அதில் இரண்டு படங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்புக்குட்டி தற்போது ‘சுழியம் ஏழு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டு, காதலித்துதான் திருமணம் செய்வேன் என்ற கொள்கையோடு இருக்கும் இளைஞன் ஒருவனின் கதைதான் சுழியம் ஏழு. இந்த படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியாக குட்டிமீனா நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் அப்புக்குட்டி, சிவபாலன் என்ற கேரக்டரில் நடிக்கின்றார்.
மேலும் இன்னும் ஒரு படத்திற்கு ஹீரோவாக நடிக்க அப்புக்குட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படம் உள்பட மொத்தம் மூன்று படங்களில் அவர் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்த வாய்ப்புகள் அனைத்துமே அஜீத்தின் போட்டோஷூட்டால் வந்தது என அனைவரும் கூறி வருகின்றனர்.