சென்னை பல்கலைக்கழகத்தில், எம்.எல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்., படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்களை சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவம் ரூ.25. அபராதமின்ற தொகையுடன் விண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசி நாளாகவும், அபராத தொகையுடன் விண்ணப்பத்தை செலுத்த ஏப்ரல் 25 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைபார்க்கலாம்.