பிரேசில் கால்பந்து வீரர் பீலேவுக்கு கொல்கத்தாவில் பாராட்டுவிழா

பிரேசில் கால்பந்து வீரர் பீலேவுக்கு கொல்கத்தாவில் பாராட்டுவிழா
pele
உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரரான பீலே கடந்த ஞாயிறு அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ISL ennum கால்பந்து போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அவருக்கு மேற்குவங்க அரசின் சார்பில் அவரை கெளரவிக்கும் வகையில் சிறப்பு விழா ஒன்று நேற்று முன் தினம் கொல்கத்தாவில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் பீலே அவர்களுடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பிரேசில் நாட்டுக்கு உலகக்கோப்பை விருதை வாங்கிக்கொண்டுத்த பிரபல கால்பந்து வீரர் பீலெ அவர்களின் பிறந்த நாள் வரும் அக்டோபர் 23ஆம் தேதி வருவதை முன்னிட்டு இந்த விழாவுடன் அவரது பிறந்த நாளும் கொல்கத்தாவில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பீலே பிறந்த நாள் கேக் வெட்டியபோது ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் பீலே அவர்கள் தனது பிறந்த நாளை இந்தியாவில் கொண்டாடியதை தாம் மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் கேக்கை அவர் தனது கையாலே பீலே அவர்களுக்கு ஊட்டினார்.

மேலும் பீலே அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று தற்போது ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply