‘அரண்மனை 2’ படத்திற்கு ‘U’ சர்டிபிகேட். வரிவிலக்கு கிடைக்குமா?
சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சுந்தர் சி, பூனம் பாஜ்வா, உள்பட பலர் நடித்துள்ள ‘அரண்மனை 2’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் நேற்று தணிக்கை செய்யப்பட்டது.
தணிக்கை அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ஒருசில சர்ச்சைக்குரிய காட்சிகளை மட்டும் கட் செய்துவிட்டு படத்திற்கு ‘U’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இந்த படம் ‘U’ சர்டிபிகேட் பெற்றுள்ளதால் தமிழக அரசின் 30% கேளிக்கை வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்தின் புரமோஷன் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும், அரையாண்டு தேர்வு விடுமுறையில் இந்த படம் வருவதால் ஃபேமிலி ஆடியன்ஸ்கள் அதிகளவு வர வாய்ப்பு இருப்பதாகவும் சுந்தர் சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.