மீண்டும் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரில் அரவிந்தசாமி
சமீபத்தில் வெளிவந்த ஜெயம் சகோதரர்களில் ‘தனி ஒருவன்’ திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் திரைக்கதை வலுவாக அமைந்திருந்தாலும், இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், அரவிந்தசாமியின் அசத்தலான வில்லன் நடிப்பு என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை.
இந்நிலையில் தொடர்ந்து வில்லன் வேடத்தில் அரவிந்தசாமி நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தன்னுடைய கேரக்டரும், திரைக்கதையும் வலுவாக அமைந்தால் யாருக்கு வேண்டுமானாலும் வில்லனாக நடிக்க தயார் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் ராம்சரண் தேஜா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்திலும் சித்தார்த் அபிமன்யூவாக நடிக்க அரவிந்தசாமி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.