ஈராக்கில் கட்டப்படும் 241 மாடிகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கட்டிடம்.

ஈராக்கில் கட்டப்படும் 241 மாடிகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கட்டிடம்.
[carousel ids=”76363,76364,76365,76366,76367,76368″] ஒருபக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு வந்தாலும் ஈராக் நாட்டில் மற்றொரு பக்கம் உலகின் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை கட்டும் முயற்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ‘தி பிரைட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் பிளான் நேற்று வெளியாகியுள்ளது.

241 மாடிகளுடன் மொத்தம் 3,162 அடி உயரத்தில் இந்த கட்டிடம் அமையவுள்ளது. ஈராக் நாட்டின் ஒரு நகரம் போல் இந்த மாபெரும் கட்டிடம் விளங்கும் என கூறப்படுகிறது. இந்த கட்டிடத்திற்குள் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளி கல்லூரிகள் என ஒரு நகரம் போலவே அமையவுள்ளது.

ஈராக் நாட்டின் பாஸ்ரா நகரத்தின் மயத்தில் அமையவுள்ள இந்த கட்டிடம் AMBS Architects என்ற நிறுவனத்தால் கட்டப்பட இருப்பதாகவும், இந்த கட்டிடம் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என அரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடத்தின் மொத்த மதிப்பு குறித்து கூற AMBS Architects நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர்.

English Summary: The 241-floor, 3,162ft-high structure would be named ‘The Bride’ and sit in the middle of Basra, in war torn Iraq

Leave a Reply