சென்னை மாவட்டத்திற்கு திமுகவின் 4 செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டார். மேலும் இதுவரை திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக இருந்து வந்த ஆற்காடு வீராசாமி அந்த பதவியில் இருந்து தூக்கப்பட்டு அதற்கு பதிலாக சென்னை மேற்கு மாவட்டத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதியதாக தேர்வு செய்யப்பட்ட திமுகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் விவரம்:
சென்னை மேற்கு:
அவைத் தலைவர் – எம்.டி.ஆர்.நாதன்
மா.செயலாளர் – ஜெ.அன்பழகன்
துணைச் செயலாளர்கள்: ஆர்.என்.துரை, கே.எஸ்.மணி, செல்வி செளந்தரராஜன்
பொருளாளர் ஐ.கென்னடி ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்கள் 3 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 8 பேரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தெற்கு:
அவைத் தலைவர் – எஸ்.குணசேகரன்
மா.செயலாளர் – மா.சுப்பிரமணியன்
துணைச் செயலாளர்கள்: த.விசுவநாதன், துரை.கபிலன், பா.வாசுகி.
பொருளாளர் – எம்.எஸ்.கே.இப்ராஹிமுடன் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் 2 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 8 பேரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு:
அவைத் தலைவர் – கோ.ஏகப்பன்
மா.செயலாளர் – பி.கே.சேகர்பாபு
துணைச் செயலாளர்கள்: தேவஜவஹர், அ.மணிவேலன், எ.புனிதவதி.
பொருளாளர் – இசட்.ஆசாத் ஆகியோருடன் 2 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், 6 பொதுக்குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வடக்கு:
அவைத் தலைவர் – டி.துரை
மா.செயலாளர் – எஸ்.சுதர்சனம்
துணைச் செயலாளர்கள்: தா.இளைய அருணா, டி.ராமகிருஷ்ணன், அறிவழகி பாலகிருஷ்ணன்.
பொருளாளர் – எல்.அருளரசன் ஆகியோருடன் 2 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், 6 பொதுக்குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளில் மாற்றம் ஒன்றும் செய்யப்படவில்லை. அக்கட்சியின் தலைவராக கருணாநிதியும், பொதுச்செயலாளராக க.அன்பழகனும், பொருளாளராக மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.