அர்ஜெண்டினா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் அபார வெற்றி

அர்ஜெண்டினா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் அபார வெற்றி

argentinaஅர்ஜெண்டினா நாட்டில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மவுரிஷியோ மேக்ரி 53 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபர் டேனியல் ஸ்கியோலி குறைந்த வாக்கு சதவீதம் பெற்று தோல்வி அடைந்தார்.

தேர்தல் முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிபர் டேனியல் ஸ்கியோலி தோல்வி அடைவார் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறிய நிலையில் தற்போது அது உண்மையாகியுள்ளது. இவருடைய ஆட்சியில் அர்ஜென்டினா பொருளாதார ரீதியாகவும், தொழில்துறை ரீதியாகவும் பின் தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அர்ஜெண்டினாவை பலமான நாடாக மாற்றிக் காட்டுவேன் என்றும் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக உயர்த்துவேன் என்றும் பொதுமக்களுக்கு எதிர்க்கட்சி வேட்பாளரான மவுரிஷியோ மேக்ரி கொடுத்த வாக்குறுதி மக்களை சென்றடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மவுரிஷியோ மேக்ரியின் வெற்றியால் அர்ஜென்டினாவில் ஏற்படும் ஆட்சி மாற்றமானது வெனிசுலா, பிரேசில் உள்ளிட்ட தென்அமெரிக்க நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply