அரிசியில் அம்மா படிப்பை துவங்கிய குழந்தைகள்!

LRG_20151023104732915235

விஜயதசமியை முன்னிட்டு, நர்சரி மற்றும் பிளே ஸ்கூல் பள்ளிகளில், குழந்தைகளை நெல் மணியில் எழுத வைத்து, கல்வியை துவக்கினர்.பள்ளி படிப்புக்கான வயதை எட்டிய குழந்தைகளுக்கு, விஜயதசமி அன்று, எழுதும் பயிற்சியை துவக்கி வைப்பது ஐதீகம். அதன்படி, விஜயதசமி திருநாளான நேற்று, நர்சரி மற்றும் பிளே ஸ்கூல் பள்ளிகளில், இரண்டரை வயதை எட்டிய குழந்தைகளை சேர்த்து, கல்வி கற்கும் பயிற்சியைத் துவக்கினர்.புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு, பிரார்த்தனை நடத்திய பின், நெல் மணிகளில், குழந்தையின் விரலால், அம்மா என தமிழிலும், மம்மி என, ஆங்கிலத்திலும் எழுத செய்து, படிப்பை துவக்கி வைத்தனர்.

Leave a Reply