கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியை நோக்கி இந்திய ராணுவப்படை நகர்ந்ததாக முன்னாள் ராணுவ தளபதி ஏ.கே செளத்ரி சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய ராணூவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்தியாவில் ராணுவப்புரட்சி ஒருபோதும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
இன்று காலை கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஏ.கே.அந்தோணி, ” இந்தியாவில் ராணுவப்புரட்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது. இந்திய ராணுவம் ஒரு பொறுப்புள்ள படை என்பதை நான் உறுதியுடன் கூறுவேன். ராணுவம் செயல்படுவதற்காக ஒரு முடிவு எடுக்கும்போது, மக்களாட்சி அரசு எடுக்கும் அனைத்து கொள்கைகளுக்கும் நிச்சயம் கட்டுப்படும். எனவே எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை.
கடந்த 2012ல் இந்திய ராணுவ டெல்லியை நோக்கி நகர்ந்த்தாக கூறப்பட்டது வழக்கமான பயிற்சிதான் என்றும், அதை பெரிதுபடுத்தவேண்டாம் என்றும் கூறிய அந்தோணி, எனக்கு ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
இந்திய மீனவர்கள் இரண்டு பேர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களை இந்திய சட்டப்படிதான் விசாரணை செய்ய முடியும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.