ஒரே ஜோடிக்கு ஏழு முறை திருமணம். அமெரிக்க காதலர்களின் வித்தியாசமான ஆசை

ஒரே ஜோடிக்கு ஏழு முறை திருமணம். அமெரிக்க காதலர்களின் வித்தியாசமான ஆசை

தற்போது விற்கும் விலைவாசியில் ஒரே ஒருமுறை திருமணம் செய்வதற்கே செலவு கட்டுபடியாகவில்லை. இந்த நிலையில் ஒரு காதல் ஜோடி ஏழு முறை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடியான திமோத்தி மற்றும் கேப்ரில்லாவுக்கு அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதக் திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணத்தில் இருவருக்குமே திருப்தி இல்லை. தங்களது திருமணம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த இந்த ஜோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விதவிதமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி உலகின் ஏழு முக்கிய நகரங்களை இவர்கள் தேர்வு செய்து அங்கு தங்களது திருமணத்தை ஏழுமுறை நடத்த முடிவெடுத்தனர். இந்த ஏழு நகரங்களில் ஒன்று சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ, இரண்டாவதாக இந்தோனேஷியாவின் பாலி, மூன்றாவதாக நேபாள நாட்டின் புத்தர் கோவில் ஆகிய இடங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சமீபத்தில் சென்னை வந்து தமிழ் கலாச்சாரத்தின்படி மந்திரங்கள் ஓதி ஐயர் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்கள் கென்யா, பராகுவே மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய இடங்களுக்கு சென்றும் திருமணம் செய்யவுள்ளனர்.

Leave a Reply