ராஜீவ் காந்தி வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு தனக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுப்பதாகவும், ஆனாலும் இறுதிமூச்சு உள்ளவரை மகனின் விடுதலைக்காக போராட இருப்பதாகவும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளர்.
பேரறிவாளன் உள்பட 7பேர்களின் விடுதலை குறித்து நீதிபதி சதாசிவம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அற்புதம்மாள், “எனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக எனது போராட்டம் மீண்டும் தொடரும் என்றும் முன்பை விட இனி அதிக பலத்தோடு போராட்டம் நடத்தி மகனின் விடுதலைக்காக தீவிர முயற்சி செய்வேன் என்றும் கூறினார். மேலும் தமிழக முதல்வர் மீது மிகுந்த தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாவும், அவருடைய உதவியினாலும்,. ஊடகங்களின் ஒத்துழைப்பாலும் எனது மகனை மீட்பேன் என்று கூறினார்.
எனது மகன் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தீர்ப்பு தள்ளிபோனதற்கு அரசியல் குறுக்கீடுதான் காரணமோ என்று நினைக்கிறேன். நீதி எங்கள் பக்கம் உள்ளது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எத்தனை காலத்திற்குதான் இந்த வழக்கை சொல்லி அரசியல் பண்ணுவார்கள்.
ஒரு பரோல் கூட இல்லாமல் 23 வருடங்களாக சிறைக் கொடுமையை அனுபவிக்கிறார்கள். எனது மகனுக்கும், ராஜீவ் கெலைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று எனது மகனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியே சொல்லிவிட்டது எங்கள் பலத்தை கூட்டி விட்டது. எவ்வளவுதான் அரசியல் குறுக்கீடுகள் இருந்தாலும் என் மகனை சட்டப்படி மீட்பேன்” எனது மகனை மீட்க முதல்வர் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு பேரறிவாளனின் தாயார் கூறியுள்ளார்.