ரஹ்மானிடம் எனக்கு பிடித்த விஷயங்கள்: சாய்ரா பானு
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு இதுவரை பொதுமேடைகளிலோ, பேட்டிகளிலோ தோன்றியிராத நிலையில் முதன்முதலில் ஜிடிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் ரஹ்மானிடம் தனக்கு பிடித்தது கூறியபோது, ‘ஏ.ஆர். ஒரு நல்ல மனிதர். அற்புதமானவர், அடக்கமானவர், நல்ல தந்தை, மிகவும் இனிமையானவர், நகைச்சுவை குணம் உடையவர், நல்ல அன்புள்ள அப்பா மற்றும் நல்ல கணவரும் கூட. அதுமட்டுமின்றி அவர் உலகின் மிகச்சிறந்த மகன்’ என்று கூறினார்.
மேலும் அவர் எங்களை விட கடவுளை மிகவும் நேசிப்பார் என்றும், அவரை முதன்முதலில் பார்த்தபோது ‘உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச தெரியுமா? கார் ஓட்ட தெரியுமா? என்று இரண்டு கேள்விகளை கேட்டதாகவும் சாயிரா பானு கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மனைவி சாய்ரா பானு குறித்து ரஹ்மான் கூறியபோது, சாய்ரா நல்ல அழகி, அதுமட்டுமின்றி எங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல அம்மா, அதுவே இந்த நாட்களில் மிகப்பெரிய பரிசு. மேலும் அவர் கம்பீரமானவர், நிறைய நல்ல குணங்கள் கொண்டவர், மேலும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் அவர் ஒரு நல்ல டான்சர்’ என்று கூறினார்.