முதலமைச்சரை கைது செய்யுங்கள். நடிகை ரோஜா ஆவேச பேச்சு

rojaஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, எம்.எல்.சி தேர்தலில் ஓட்டுபோட உள்ள எம்.எல்.ஏ ஒருவருக்கு பணம் கொடுத்ததாக ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதையும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக தற்போது எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர். இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ரோஜா ஒருபடி மேலே போய் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்யவேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று நகரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய ரோஜா எம்.எல்.ஏ, “‘எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டுபோட எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும். அதுமட்டுமிறி ஆந்திரா அரசையும் உடனடியாக கலைக்க வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவின் டெலிபோன் உரையாடல் மூலம் அவர் எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.வுக்கு பணம் கொடுத்த ரேவந்த் ரெட்டி 22 முறை பாஸ் மற்றும் பாபு ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். டெலிபோன் உரையாடலில் இருப்பது எனது குரல் இல்லை என்று சந்திரபாபு நாயுடு கூறுகிறார். பின்னர் எனது டெலிபோன் பேச்சு டேப் செய்யப்பட்டுள்ளது என்கிறார்.

இதில் இருந்தே லஞ்சம் கொடுத்ததை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். லஞ்சம் கொடுத்தது சாதாரண ஆள் என்றால் இந்நேரம் கைது செய்திருப்பார்கள். முதல்வர் என்பதால் கைது கிடையாதா? சந்திரபாபு நாயுடு, நான் நெருப்பு. லஞ்சத்தை ஒழிப்பேன் என்று மேடையில் பேசுவார். ஆனால், இன்று லஞ்சம் கொடுத்த வழக்கில் அவர் சிக்கியிருப்பதை எல்லா மொழி பேசும் மக்களும் இந்தியா முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளார்கள்”

இவ்வாறு நடிகை ரோஜா பேசியுள்ளார்.

Leave a Reply