இங்கிலாந்தில் செயற்கை ரத்தம் கண்டுபிடிப்பு. இனி ரத்த தானம் தேவையில்லையா?

artificial bloodஉலகமெங்கும் இரத்த தானம் செய்ய பல விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் மற்றும் விளம்பரங்கள் வந்திருந்தாலும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இன்னும் பொதுமக்களிடையே தோன்றவில்லை என்றுதான் கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு தீர்வு காண விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தவண்ணம் இருந்தனர். இந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும், உலகின் முதல் செயற்கை ரத்தம் தற்போது இங்கிலாந்தில் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை ரத்தத்தை தயாரித்துள்ளனர். இந்த ரத்தத்தை மனிதர்களின் உடலில் செலுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் மனிதனுக்கு இந்த செயற்கை ரத்தம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் அதிகம் கிடைக்காத அரிய ரத்த பிரிவுகள் வேண்டிய நேரத்தில் கிடைக்க செய்ய முயல்கிறோமே தவிர ரத்த தானத்தை முழுமையாக தவிர்க்கும் எண்ணம் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் வருகிற 2017ஆம் ஆண்டில் அதாவது இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை ரத்தம் நேரடியாக மனித உடலில் செலுத்தி சோதனை செய்யும் நிலையை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த சோகை, மற்றும் ரத்த அழிவு சோகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செயற்கை ரத்தம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply