செயற்கை குளிர்பானங்களே தொப்பை வரக்காரணம்

eb19d32b-1829-4bde-8e55-3b78c9cdbd6b_S_secvpf

உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர் விரும்புகின்றனர்.

வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது.

ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப்படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது.

எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மேலும் அதில் சேர்க்கப்படும் பொருட்களால் உடல்  ஆரோக்கியத்தை கெடுக்கின்றன. ஆனால் இன்றைய தலைமுறையினர் விரும்புவது இந்த செயற்கை பானங்களை மட்டுமே. இதனால் உடல் நலம் கெடுகிறது என்பதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை. 

Leave a Reply