மனிதன் கதைக்கும்போது குரல் வளையிலுள்ள குரல் நாண்கள் அதிர்வதன் மூலம் ஒலி பிறப்பிக்கப்படுவது யாவரும் அறிந்ததே.
இந்த இயற்கையின் விந்தையை தற்போது செயற்கையாக நிகழ்த்திக் காட்டியுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.
அதாவது மனிதனின் குரல் வளைக்கு ஒத்த செயற்கையான குரல்வளையினை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் குரல்வளையிலிருந்து எவ்வாறு ஒலி பிறப்பிக்கப்படுகின்றது என்பதை துல்லியமாக விபரிக்கக்கூடியவாறு இருக்கின்றமை என்பது குறிப்பிடத்தக்கது