50 அடி நீள புத்தரின் மணற்சிற்பம். இலங்கையில் இந்தியர் செய்த சாதனை

50 அடி நீள புத்தரின் மணற்சிற்பம். இலங்கையில் இந்தியர் செய்த சாதனை

இலங்கையில் நடைப்பெறும் 14வது சர்வதேச புத்த பூர்ணிமா தினம் கொண்டாட்டத்தில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்னாயக் கலந்து கொண்டு புத்தரின் மணல் சிற்பம் வடித்துள்ளார்.

கொழும்புவில் நடைப்பெறும் புத்த பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்றிரவு பிரதமர் மோடி நேற்று இலங்கை சென்றார். அதே போல் பிரபல இந்திய மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்கும் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுதர்சன் பட்னாயக், கொழும்பு நாடாளுமன்ற வளாகத்தில் 50 அடி நீள புத்தர் நித்திரையில் இருப்பது போன்ற மணல் சிற்பத்தை உருவாக்கி கொண்டுள்ளார். உலக சாதனை படைப்பதற்காக இந்த 50 அடி நீள புத்தர் சிற்பம் உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக சுதர்சன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த சர்வதேச மணல் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்னாயக் தங்கப்பதக்கம் வென்றார் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply