விக்கி லீக்ஸ் எட்வர்ட் ஸ்னோடனுக்கு நியூயார்க்கில் சிலை. பெரும் பரபரப்பு.

A large molded bust of Edward Snowden is pictured in Fort Greene Park at the Brooklyn borough of New Yorkஅமெரிக்காவின் உளவு வேலைகளை அம்பலப்படுத்தி அந்நாட்டின் தலைவர்களை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கிய விக்கிலீக்ஸ் அதிபர் எட்வர்ட் ஸ்னோடனுக்கு நியூயார்க்கில் சிலர் சிலை வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் சேர்ந்து உலக அளவில் உளவு வேலைகளில் ஈடுபட்டுவந்ததை எட்வர்ட் தனது விக்கிலீக்ஸ் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தினார்.  இதில் வெளிநாடுகளின் ரகசியங்கள் மட்டுமின்று, உள்நாட்டில் வாழும் பொதுமக்களின் மின் அஞ்சல்கள், சமூக வலைதள நடவடிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் ஆகியவைகளும் உளவு செய்யப்பட்டதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு எட்வர்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

எட்வர்ட் இதனை வெளிப்படுத்தியதால் அமெரிக்க அரசின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனால் எட்வர்ட் அமெரிக்காவில் இருந்து வெளியேறி ரஷ்யாவிற்கு தப்பி சென்று விட்டார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ரஷ்யாவில் வசித்து வருகிறார்.

எட்வர்ட் ஸ்னோடெனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில கலைஞர்கள் சேர்ந்து, போரில் மரணம் அடைந்தவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள நியூயார்க் பூங்காவில் ஸ்னோடெனுக்கு அனுமதி பெறாமல் சிலை வைத்துவிட்டார்கள். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் துணியால் சிலையை மூடினார்கள். பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி அங்கிருந்து சிலை அகற்றப்பட்டது.

இது பற்றி அடையாளம் தெரியாத அந்த கலைஞர்கள் அனிமல் நியூயார்க் என்ற வலைபூவில் “இப்போது அநீதிக்கு எதிராக போராடுபவர்களுக்கு வெங்கலத்தில் சிலை வைப்பதற்கு பதிலாக அவர்கள் குற்றவாளிகள் என்று கூறி துரத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்து உள்ளார்கள்

Leave a Reply