குஜராத்தின் 4 கிராமங்களை தத்தெடுத்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி.

arunமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குஜராத் மாநிலத்டில் உள்ள நான்கு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். இந்த நான்கு கிராமங்களின் வளர்ச்சியில் தனிகவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி  ஆதர்ஷ் கிராம் யோஜ்னா திட்டத்தை அறிவித்தார். இதன்படி அனைத்து கட்சியை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 3 கிராமங்களை தத்தெடுத்து, அவற்றின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இந்தியாவில் மொத்தம் 790 எம்.பிக்கள் இருப்பதால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன்மூலம் வளர்ச்சியடையும் என்பது பிரதமரின் நம்பிக்கை.

பிரதமரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் கிராமங்களை தேர்வு செய்து தத்தெடுத்து வரும் நிலையில் குஜராத்தில் உள்ள வதேரா மாவட்டத்தின் கர்னாலி, பிப்பாலியா, வாலிடா, மற்றும் பக்லிபுரா ஆகிய நான்கு கிராமங்களைத்  தத்தெடுத்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தான் தத்தெடுத்துள்ள மேற்கண்ட நான்கு கிராமங்களிலும் வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Reply