சுவிஸ் வங்கியில் சட்டவிரோதமாக கணக்கு ஆரம்பித்து கோடிக்கணக்கில் பணம் பதுக்கியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
நேற்று லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அருண்ஜெட்லி, “சுவிஸ் வங்கியில் சட்டவிரோதமாக கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை தருமாறு சுவிஸ் நாட்டு அதிகாரிகளுடன் இந்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக சுவிஸ் அரசும் அந்த பட்டியலை விரைவில் கொடுக்க சம்மதித்துள்ளது.
சமீபத்தில் சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக கணக்கு வைத்துள்ள 700 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை பிரான்ஸ் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் அளித்துள்ள பட்டியலில் உள்ள இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக வருமான வரி மற்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன” என்றார்.