அருண்ஜெட்லியின் பட்ஜெட். யாருக்கு ஆதாயம்? யாருக்கு பாதிப்பு?
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று மக்களவையில் தாக்கல் செய்த 2017-18ஆம் ஆண்டின் பட்ஜெட்டிற்கு அரசியல் கட்சிகள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பட்ஜெட்டால் ஆதாயம் அடைபவர்கள் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் யார் யார் என்று பார்ப்போம்
இந்த பட்ஜெட்டால் ஆதாயம் அடையும் துறைகளாக ரியல் எஸ்டேட், கட்டமைப்புத்துறை, நுகர்வோர் மற்றும் சில்லரை வர்த்தகம், வேளாண் துறை, எரிவாயு இறக்குமதி ஆகிய துறைகளுக்கு ஆதாயம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். ரியல் எஸ்டேட் துறையை பொருத்தவரையில் குறைந்த விலை குடியிருப்புகளை உருவாக்கும் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ், ஆஷியானா ஹவுசிங், டாடா ஹவுசிங், வேல்யூ மற்றும் பட்ஜெட் ஹவுசிங் கார்ப்ப ரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு இது சாதகமான பட்ஜெட் என்று கூறப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு பிரதமர் மோடி அறிவித்துள்ளதால் மேற்கண்ட நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ், மாரிகோ லிமிடெட், டாபர் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பட்ஜெட் ஆட்டோமொபைல், எண்ணெய் துறாஇ, மின்னணு துறை ஆகிய துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. ஆட்டோமொபைல் துறைக்கு ஏமாற்றமாய் அமைந்திருக்கும் இந்த பட்ஜெட், எண்ணெய், எரிவாயு நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா நிறுவனங்களுக்கு பாதகமான அம்சமாக கருதப்படுகிறாது.