அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

images

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உத்தராயண புண்ணியகால உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகைதீப திருவிழா, ஆடிப்பூரம், உத்தராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயன புண்ணியகால உற்சவம் ஆகிய திருவிழாக்களின்போது கொடியேற்றம் நடக்கும். இதில் ஆடிப்பூரத்தின்போது மட்டும் அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திலும், மற்ற 3 திருவிழாக்களின்போதும் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்திலும் கொடியேற்றப்படும்.

அருணாசலேஸ்வரர் கோவில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் உத்தராயண புண்ணியகால உற்சவமும் ஒன்றாகும்.

கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கும் இந்த உத்தராயண புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதற்காக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார், அம்மன் ஆகியோர் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர்.

சுமார் 6.30 மணிக்கு கோவில் குருக்கள் மந்திரங்கள் ஓத கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். வருகிற 15–நி தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

தீர்த்தவாரி

தினமும் காலை மற்றும் இரவில் சாமி வீதிஉலா நடக்கிறது. 10–வது நாளான 15–ந் தேதி காலையில் தாமரை குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் கொடியிறக்கமும் நடக்கிறது.

Leave a Reply