அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம். இன்னும் எத்தனை மாற்றங்களோ?
நேற்று முன் தினம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 227 தொகுதிகளுக்கும் அதிரடியாக வேட்பாளரை அறிவித்தார். இருப்பினும் இந்த வேட்பாளர் பட்டியல் இறுதியானதாக இருக்காது என்றும், இதில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும் அதிமுகவினர்களே கூறி வந்த நிலையில் நேற்று இரவு முதல் மாற்றம் நடைபெற்றுள்ளது.
அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முத்துராஜா என்பவர் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வைகை செல்வன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒருசில வேட்பாளர்களின் மேல் கட்சியினர் தலைமைக்கு புகார் அனுப்பிகொண்டிருப்பதால் இன்னும் ஒருசில மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் நிச்சயம் வேட்பாளர் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தமாக தலைவர் வாசன் அதிமுக அணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஒருவேளை அவர் இணைந்தால் அவருக்கு கொடுக்கப்படும் தொகுதிகளுக்கு ஏற்ப அதிமுக வேட்பாளர்களில் மேலும் சில மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.