குஷ்புவின் இயக்கத்தில் நடிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

12 copy

தலைப்பை பார்த்ததும் நம்மூர் குஷ்பு என யாரும் நினைத்துவிட வேண்டாம். இவர் குஷ்பு ரங்கா. சமீபத்தில் 61 வது தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிப் ஆஃப் தீசியஸ் என்ற படத்தின் இயக்குனர்தான் இந்த குஷ்பு ரங்கா.

குஷ்பு ரங்காவும், இவருடைய நண்பர் விஜய் சுக்லாவும் ஆம் ஆத்மி கட்சி குறித்த ஒரு டாக்குமெண்டரி திரைப்படம் இயக்கி வருகின்றனர். படத்தின் பெயர் Proposition for a Revolution. இந்த படத்தில் ஒருசில காட்சிகளில் நடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டுள்ளார்.

தன்னைப் பற்றிய நெகட்டிவ் கருத்துக்களையும் சேர்த்தே டாக்குமெண்டரியை தயார் செய்யுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால், குஷ்புவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் முதல் தற்போது அவர் பிரச்சாரத்தின் போது அடிவாங்கியது வரை பல வீடியோ காட்சிகளை இவர்கள் தங்கள் டாக்குமெண்டரியில் இணைத்துள்ளனர். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.12 லட்சம்தான்.

விரைவில் வெளிவர இருக்கும் இந்த டாக்குமெண்டரி படத்தின் டீசருக்கே தடைகேட்டு விண்ணப்பித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. டீசருக்கே இந்த கதி என்றால் மெயின் மூவி வெளிவர என்னென்ன்ன சவால்களை சந்திக்க காத்திருக்கின்றார் குஷ்பு என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply