டில்லியில் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று கடந்த 14ஆம் தேதி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், முதல் நடவடிக்கையாக மக்களை பெரிதும் பாதிக்கும் மின்கட்டணத்தை குறைப்பது குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மின் கட்டணத்தை பாதியாக குறைப்போம் என ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் அரவிந்த் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதுகுறித்த யோசனைகளை உடனடியாக தெரிவிக்குமாறு அவர், மாநில அரசின் நிதி மற்றும் மின்சார துறைகளை கேட்டுக் கொண்டு உள்ளார்.
மேலும் நேற்று முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டெல்லியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிப்பது குறித்த எந்த உத்தேசமும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு, விரைவில் வரும் என கூறப்படுகிறது.