அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய மற்றொரு டேப் கசிவு. நெருக்கடியில் ஆம் ஆத்மி.

aravind kejriwaகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரிடம் பேரம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ரகசிய டேப் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் ஒரு டேப் வெளியாகியுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள நரேந்திர மோடியின் அலையை தடுப்பதற்கு ஆம் ஆத்மியை தேர்ந்தெடுப்பதைத் தவிர இஸ்லாமியர்களுக்கு வேறு வழியில்லை என அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாக ஒரு டேப் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், அதிகப்படியான இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பது முக்கிய நோக்கமல்ல என்றும், டெல்லியில் மொத்தம் 11 இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக நிறுத்துமாறு மட்டுமே அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாகவும் அந்த டேப்பில் உள்ளது.
 
அதிகப்படியான வேட்பாளர்களுக்குப் பதிலாக நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதே இஸ்லாமியர்களின் விருப்பம் என்று பேசியுள்ள கெஜ்ரிவால், அவர்கள் கேட்டுக்கொண்டபடி 11 பேரை நிறுத்திவிட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில், ஆம் ஆத்மி கட்சியைத் தவிர வேறு யாராலும் மோடி அலையை தடுத்து நிறுத்த முடியாது என்று கெஜ்ரிவால் கூறியதாகவும், காங்கிரஸ் கட்சி முடிந்துபோன ஒன்று என்றும் தெரிவித்துள்ளதாகவும் அந்த டேப்பில் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
 
சர்ச்சைக்குரிய இந்த டேப்பை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ஒருவரே கசியவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply