பாரதிய ஜனதாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அதிரடி சுற்றுப்பயணம் செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், உயிரோடு இருக்கும் மூன்று நபர்களுக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய RTI குழுவினர்களை சேர்ந்த நான்கு பேர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்போவதாகவும் கூறினார். உண்மையில் அந்த நான்கு பேர்களில் ஒருவர் மட்டுமே கடந்த 2010ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். மற்ற மூவரும் அந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.
Amit Jethwa, Bhagu Dewani, Jaysukh Bhambhaniya மற்றும்Manisha Goswami ஆகிய நான்கு போராளிகளில் கடந்த ஜூலை மாதம் 2010ஆம் ஆண்டு Amit Jethwa மட்டுமே கொல்லப்பட்டார் என்றும் இந்த உண்மைகூட தெரியாமல் உயிரோடு இருப்பவர்களுக்கு அஞ்சலி செலுத்தி காமெடி அரசியல் செய்வதாகவும் பாரதிய ஜனதா கட்சி, அரவிந்த கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது