விஷால் மீது யாராது கைவைத்தால் “செஞ்சிருவேன்”. ஆர்யா மிரட்டல்

விஷால் மீது யாராது கைவைத்தால் “செஞ்சிருவேன்”. ஆர்யா மிரட்டல்

arya and vishalஇளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ மற்றும் புரட்சி தளபதி விஷால் நடித்த ‘பாயும் புலி’ ஆகிய இரண்டு படங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் விஷாலின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர் ஒருவர், “சிவாஜிகணேசன் இன்னும் சாகவில்லை. அவர் விஜய் வடிவில் உயிருடன் தான் உள்ளார்” என டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷால், ‘மிகச்சிறப்பான போட்டோஷாப் ஒர்க்குடன் பதிவு செய்யப்பட்ட இந்த டுவீட்டை யாரோ வேலைவெட்டி இல்லாத நபர் பதிவு செய்துள்ளார்’ என்று கூறி உடனே அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டார்.

இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்ட விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா, ‘என்னுடைய நண்பன், புரட்சித்தளபதி டுவிட்டரை யாருடா ஹேக் செய்தது. அவர் டுவிட்டர் மீது இனிமேல் யாராவது கை வைத்தால் செஞ்சுருவேன்’ என்று மாரி படத்தில் வரும் தனுஷ் பாணியில் தனது டுவிட்டரில் மிரட்டியுள்ளார்.

Leave a Reply