ஆஷஷ் தொடர். 2வது போட்டியில் வெற்றி பெரும் நிலையில் ஆஸ்திரேலியா
ஆஷஷ் தொடர் கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் நிலையில் வலுவாக உள்ளது.
இந்த போட்டி கடந்த 16ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் என்று இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஸ்மித் மிக அபாரமாக விளையாடி 215 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரோஜர்ஸ் 173 ரன்கள் குவித்தார்.
இதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 90.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 312 ரன்கள் எடுத்தது. குக் 96 ரன்களும், ஸ்டோக்ஸ் 87 ரன்களும் எடுத்தனர்.
முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் அதிகம் இருந்த நிலைஇல் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் குவித்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டிய நிலை உள்ளது.