அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இன்னும் சில நாட்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் மங்காத்தா படத்தில் போலீஸ்காரராக நடித்த அஸ்வின் ‘தல 56’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அவர் இந்த படத்தில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜீத்தின் தங்கைக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதால் அஜீத்துக்கு மச்சான் கேரக்டராக நடிக்கும் அஸ்வினை படக்குழுவினர்களும் விளையாட்டாக மச்சான் என்றே அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அனிருத் ஏற்கனவே அஜீத்தின் அறிமுகப்பாடல் உள்பட இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.