ஆசியகோப்பை கிரிக்கெட்: இலங்கை அதிர்ச்சி தோல்வி

ஆசியகோப்பை கிரிக்கெட்: இலங்கை அதிர்ச்சி தோல்வி
cricket
ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டி நேற்று இரவு மிர்பூர் நகரில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் எடுத்தது. சபீர் ரஹ்மான் மிக அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இலங்கை அணி வங்கதேச பந்துவீச்சுக்கு ரன் எடுக்க திணறியது. இறுதியில் 20 ஓவர்களில் அந்த அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.சண்டிமால் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 37 ரன்கள் எடுத்தார்.

Leave a Reply