கச்சா எண்ணெயின் விலையில் பெரும் வீழ்ச்சி. ஆட்டம் கண்டது ஆசிய பங்குச்சந்தை.

asiaநேற்று உலக வர்த்தக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் ஆசிய பங்குச் சந்தைகளிலும் நேற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்தனர்.

பெட்ரோல் விலையில் ஏற்பட்ட அதிரடியான வீழ்ச்சி, யூரோ வலயத்தில் கிரேக்க நாடு தொடர்ந்து இருக்குமா இல்லையா என்பது குறித்த தெளிவின்மை ஆகியவை காரணமாக பங்குச்சந்தையில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ஒரு சதவிகிதமும், டோக்கியோவில் மூன்று சதவிகிதமும்  வீழ்ச்சியடைந்துள்ளது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் திங்களன்று ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து அவை ஸ்திரமடைந்துவிடும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவை நேற்று சற்று ஏற்றத்துடன் வணிகத்தை தொடங்கின. பெட்ரோலிய விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து அமெரிக்க பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. இந்த வீழ்ச்சிகள் உலக பொருளாதாரம் மந்தமடைவதை காண்பிக்கிறதோ என்று முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Leave a Reply