ஆசிய கோப்பை கிரிக்கெட்: 25ஆம் தேதி தொடங்குகிறது.

இம்மாதம்  25ஆம் தேதி முதல் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன.

வங்காள தேசத்தில் உள்ள மிர்பூர், பதுலுல்லா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. வருகிற 25ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.  25ஆம் தேதி ஆரம்பிக்க உள்ள முதல் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.

26ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் வங்காள தேசத்துக்கு எதிராக விளையாடுகிறது. மேலும் 28–ந்தேதி இலங்கையுடனும், மார்ச் 2–ந்தேதி பாகிஸ்தானுடனும், 5–ந்தேதி ஆப்கானிஸ்தானுடனும் இந்தியா அணி மோதுகின்றன.

ஏற்கனவே நியூசிலாந்து தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் வெறுங்கையுடன் நாடு திரும்பிய இந்திய அணி, இந்த தொடரிலாவது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply