ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மலிங்கா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பெராரே 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், திராமின்னே மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மேலும் கேப்டன் சங்கரகரா 67 ரன்களும் மாத்யூஸ் 55 ரன்களூம் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் உமர் குல் மற்றும் சாஹித் அப்ரிடி தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தானனணி, 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மிஸ்பா உல் ஹக் மற்றும் உமர் அக்மால் ஆகியோர் அபாரமாக விளையாடியும் பாகிஸ்தான் தோல்வியை தவிர்க்கமுடியவில்லை.
ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய மலிங்கா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று இந்தியா, வங்காளதேசம் இடையேயான போட்டி நடைபெற உள்ளது.