சீனாவில் உலகின் மிக நீளமான சுரங்க ரயில் நிலையம். 1,47,000 சதுரமீட்டர் பரப்பளவில் பிரமாண்டம்

சீனாவில் உலகின் மிக நீளமான சுரங்க ரயில் நிலையம். 1,47,000 சதுரமீட்டர் பரப்பளவில் பிரமாண்டம்
china
உலகிலேயே மிகப்பெரிய சுரங்க ரெயில் நிலையத்தை சீனா கடந்த புத்தாண்டு தினத்தில் தொடங்கியுள்ளது. இந்த ரயில் நிலையில்  ஒரு லட்சத்து 47 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவை கொண்டது. அதாவது 21 கால்பந்தாட்ட மைதானங்கள் ஒன்றிணைந்ததுபோல் காட்சியளிக்கும் இந்த ரயில் நிலையம் சீனாவின் ஷென்ழென் நகரில் அமைக்கபட்டுள்ளது. இந்த நகரம் ஹாங்காங் எல்லையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுரங்கப்பாதை மூலம் ஷென்ழென் நகர பயணிகள் ஹாங்காங் நகருக்கு வெறும் 15 நிமிடங்களில் இந்த சுரங்கப்பாதை ரயில் மூலம் சென்றடையலாம். மேலும் முன்னர், சாதாரண எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் குவாங்க்ஸூ நகரில் இருந்து ஹாங்காங் நகருக்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆகும். ஆனால் இந்த சுரங்க ரயில் நிலையம் திறந்த பிறகு புதிய அதிவேக சுரங்க ரெயில் மூலம் தற்போது ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். இந்த வழித்தடத்தில் மணிக்கு சுமார் முன்னாறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

Chennai Today News: Asia’s largest underground railway station to open in China

Leave a Reply