தமிழில் போக்கிரி, கஜினி, தசாவதாரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை அசின் தற்போது பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார். சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகிய முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த அசின், கடந்த 2012ம் ஆண்டில் வெளியான ‘கில்லாடி 786’ படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இரண்டு வருடம் கழித்து மீண்டும் தற்போது “ஆல் ஈஸ் வெல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபிஷேக் பச்சன், ரிஷி கபூர், அசின், சுப்ரியா பதக் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஹிமேஷ் ரேஷ்மயா, அமால் மாலிக், மீட் ப்ரோஸ் அஞ்சான், மிதூன் ஆகிய நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்து வருகின்றனர்.
ரிஷி கபூரும், சுப்ரியா பதக்கும், அபிஷேக் பச்சனுக்கு அப்பா, அம்மாவாக நடிக்கிறார்கள். இவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் சண்டை சச்சரவுடன் இருக்கின்றனர். அபிஷேக் பச்சன் அப்பாவை மதிக்காதவர், எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் இவர்கள் ஒரு ஜீப்பில் பயணம் போகிறார்கள். அந்தப் பயணத்தில் ஏற்படும் வித்தியாசமான சம்பவங்கள் நால்வரையும் இணைக்கிறது. ஒருவரை ஒருவர் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதையாம்.
இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. டிரெய்லரில் ஓரிடத்தில் ‘மீட் த மெண்டல் ஃபேமிலி’ என்கிற வாசகம் வருகிறது. எனவே படத்தில் தனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு கேனத்தனமாக நடப்பது போன்று ஒவ்வொரு கேரக்டரும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மெண்டல் ஃபேமிலியில் அசின் ஏன் இணைகிறார் என்பதுதான் சஸ்பென்ஸ்’ என்கின்றனர் படக்குழுவினர்.