தமிழகத்தை நோக்கி இன்னொரு புயல். தாங்குமா சென்னை?

தமிழகத்தை நோக்கி இன்னொரு புயல். தாங்குமா சென்னை?

நாடா, வார்தா புயல்களை தொடர்ந்து தமிழகத்தை நோக்கி இன்னொரு புயல் உருவாகி இருப்பதாகவும் அதற்கு ‘அஸ்ரி’ என்ற பெயர் வைக்கப்படவிருப்பதாகவும் வானிலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தம் அந்தமானுக்கு தென்திசையிலும் சுமத்ரா தீவுக்கு வடக்குத் திசையிலும் உருவாகியுள்ளதாகவும், இது புயலாக உருவானால் தமிழகம் இன்னொரு புயலை எதிர்நோக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

வார்தா புயலின் பாதிப்புகளில் இருந்தே சென்னை இன்னும் மீளவில்லை. இன்னும் பல இடங்களில் மின்சாரம், இண்டர்நெட், செல்போன் டவர் ஆகியவை வேலை செய்யவில்லை. இந்நிலையில் இன்னொரு புயல் தாக்கினால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply