விண்வெளியை பட்டா போட்டு விற்கும் ரஷ்ய விஞ்ஞானி!
விண்வெளியில் உருவாகும் புதிய நாட்டில் குடியேற 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் இதற்கான விற்பனை விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஏரோஸ்பேஸ் இன்டர்நேஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி, ‘அஸ்கார்சியா’ என்ற பெயரில் விண்வெளியில் ஒரு நாட்டையே உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி, விண்வெளியில் தான் உருவாகவுள்ள இந்த புதிய நாடு பற்றிய அறிவித்தார். அந்த நாட்டில் வசிக்க விரும்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அப்போது கூறினார்.
இதன் பேரில், சர்வதேச அளவில் 200 நாடுகளில் இருந்து 5 லட்சம் பேர் விண்வெளி தேசத்தில் வசிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 லட்சம் பேர் தேர்வுசெய்யப்பட்டு விண்வெளி தேசத்தில் வசிக்க அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதாம்!
ஆனால், இந்த விண்வெளி தேசத்தை உருவாக்கும் பணி வருகிற செப்டம்பர் மாதம்தான் தொடங்கவுள்ளது. இதற்காக, அகார்சியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் செப்டம்பரில் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாம்.