குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டு திடீரென பின்வாங்கிய முன்னாள் முதல்வர்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டு திடீரென பின்வாங்கிய முன்னாள் முதல்வர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை தாக்கல் செய்தபோது அதற்கு ஆதரவு கொடுத்த கட்சிகளில் ஒன்று அசாம் மாநிலத்தில் உள்ள அசாம் கன பரிஷத் கட்சியும் ஆகும்

அசாமில் பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் இந்த கட்சி தற்போது அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை கண்டு பதற்றம் அடைந்து தற்போது குடியுரிமை சட்டத் மசோதாவிற்கு தங்கள் கட்சியின் ஆதரவு இல்லை என திடீரென அறிவித்துள்ளது

இதனை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மகந்தா அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை பாஜக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லையெனில் அசாமில் நடைபெற்று வரும் பாஜக அரசுக்கு அளித்து வருவதை விலக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆதரவு தெரிவித்து விட்டு தற்போது திடீரென முன்னாள் முதல்வர் மகந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply