சசிகலாவின் சீராய்வு மனு இன்று விசாரணை! விடுதலை ஆவாரா?

சசிகலாவின் சீராய்வு மனு இன்று விசாரணை! விடுதலை ஆவாரா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. இந்த நிலையில் சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி சசிகலா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.எம்.கன்வில்கரின் சேம்பரில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

சசிகலா தரப்பின் சீராய்வு மனுவை விசாரிக்க புதிதாக நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அமிதவராய் அந்த அமர்வுக்கு தலைமையாக செயல்படுவார். நீதிபதியின் சேம்பரில் நடக்கும் விசாரணை என்பதால் பெரிதாக வழக்கறிஞர்களின் வாதம் இடம்பெறாது. எனவே சீராய்வு மனு குறித்த இறுதி முடிவு மட்டுமே அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சசிகலாவுக்கு சாதகமாக முடிந்தால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply