பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தாற்காலிக ஆய்வுக்கூட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு பல்கலைக்கழக விலங்கியல் துறையில் டேக்சி டெர்மிஸ்ட் மற்றும் மைக்ரோ-டெக்னிஷியன் பணிகளுக்கு தாற்காலிகமாக வேலைசெய்ய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டேக்சிடெர்மிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பியூசி அல்லது 11-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆய்வுக்கூடத்தில் சோதனைப்பொருள்களை வரிசைப்படி வைக்கும் பணியில் 6மாதங்கள் அனுபவம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
மைக்ரோ-டெக்னிஷியன் பணிக்கு விண்ணப்பிப்போர், 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆய்வுக்கூடத்தில் பாறை சிதறல்களை குறிப்பிட்ட வடிவதற்கு கொண்டுவரும் பயிற்சி இருத்தல் அவசியம்.
இப்பணிகளுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-22961551/22961556 என்ற தொலைபேசி எண்களில் அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.