மன்னர் போஜராஜன் அஷ்டலட்சுமிகளை தினமும் பூஜித்து வந்தார். ஒருமுறை, இவருடன் ஒரே ஒரு லட்சுமி மட்டும் இருக்கும் சூழல் உருவான போது, போஜராஜன் தைரியலட்சுமி மட்டும் போதும் என தெரிவித்தான். தைரியம் இருந்தால் மற்ற எல்லா லட்சுமிகளும் தானாகவே வந்து விடுவார்கள். எனவே, அஷ்ட லட்சுமிகளும் அவனை விட்டு பிரிய இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் வீரலட்சுமி எனப்படும் தைரிய லட்சுமியை வணங்குங்கள். மற்ற எல்லா லட்சுமிகளும் உங்களோடு இருப்பார்கள்.