அஷ்டமி, நவமி திதிகள் என்றாலே, எந்த ஒரு நல்லக் காரியத்திலும் இறங்காமல் இந்தத் திதிகளை மக்கள்ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே, நாங்கள் என்ன பாவம் செய்தோம்?” என்று வருந்தினவாம். அதற்கு கருணை வடிவே ஆன இறைவன் “உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன். அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாராம்.
பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.
ஸ்ரீ ராமன், சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் 4 – ஆம் பாதத்தில் அவதரித்தார். ஸ்ரீராமர் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது தான் ஸ்ரீராம ஜன்மோத்ஸவம் – ஸ்ரீ ராம நவமி என்று நாட்டு மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள்.