அலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தீர்வு?

Asthma

நகரமயமாக்கலின் காரணமாக பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது. இரவு முழுவதும் உறங்க முடியாமல், மூச்சுவிடவே சிரமப்பட வைக்கும் ஆஸ்துமாவைப் பற்றித் தெரிந்து கொண்டால் முடிந்த வரையில் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.

ஆஸ்துமா என்றால் என்ன?

ஆஸ்துமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய். சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய், சுவாசிப்பதே சிரமமாக இருக்கும்.

ஆஸ்துமா எதனால் வருகிறது?
1. சிகரட் புகை
2. கயிறு துகள், மரத்தூள்
3. செல்லப் பிராணிகளின் முடி
4. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு
5. அடிக்கடி மாறும் காலநிலை
6. மன அழுத்தம்
7. வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை
8. சளித்தொல்லை
9. தும்மல் பிரச்னை
10. பரம்பரை காரணம் (குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரலாம்).

அறிகுறிகள்…
1. மூச்சு இளைத்தல் (வீசிங் பிரச்னை)
2. அடிக்கடி இருமுவது, தும்முவது போன்ற பிரச்னைகள்
3. முகம், உதடு ஊதா நிறத்தில் மாறுவது
4. அடிக்கடி, திடீரென ஏற்படும் சுவாசக் கோளாறு
5. பயம், பதட்டம் காரணமாக அடிக்கடி வியர்த்தல்
6. நெஞ்சுவலி
7. சீரற்ற இதயத் துடிப்பு

தீர்வு…
=> மருத்துவர் அறிவுரையோடு ‘இன்ஹேலர் தெரப்பி’ மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
=> சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.
=> சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
=> தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும்.
=> குளிர்பானங்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
=> தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.

தடுக்கும் வழிமுறைகள்…
1. படுக்கை அறையை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறை, பெட் ஷீட் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.
2. வீட்டில் தூசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகளை அகற்றும்போது முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.
3. ஏசி அளவை நார்மலாக வைத்திருக்க வேண்டும். அறைக்கு வெளியே உள்ள வெப்ப நிலையைவிட, அறையில் அதீத குளிரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
4. சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.
6. தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு அதிகம் இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
7. சிகரெட் பிடிக்கவும் கூடாது;  சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.
8. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் ஒவ்வாமை இருந்தால் அந்த பிராணியை முடிந்த வரையில் தனி அறையில் வைத்திருக்க வேண்டும் அதன் அருகில் செல்ல கூடாது.
9. வருடம் ஒருமுறை சுவாச பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
10. எந்த பொருளால் அலர்ஜி ஏற்பட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஆஸ்துமா பிரச்னை வராமல் தடுக்கலாம். ஏற்கெனவே இருப்பவர்கள், அது தீவிரம் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply