கவிழ்ந்த லாரியில் பெட்ரோலை பிடித்த153 பேர் உயிருடன் கருகிய பரிதாபம்
பெட்ரோல் லாரி விபத்துக்குள்ளானால் அதில் இருந்து கசியும் பெட்ரோலை பிடிப்பது பொதுமக்களின் வாடிக்கைதான். இதனால் உயிருக்கு ரிஸ்க் என்று தெரிந்தும் பொதுமக்களின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது
இந்த நிலையில் பாகிஸ்தானில் சமீபத்தில் பெட்ரோல் லாரி ஒன்று நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனால் அந்த லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான பெட்ரோல் சாலையில் ஆறாக ஓடியது.
இந்த பெட்ரோலை பிடிக்க அந்த பகுதி பொதுமக்கள் கேன், வாளி, சட்டி, பானை ஆகியவற்றை கொண்டு வந்து பிடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிகரெட் பிடித்து கொண்டிருந்த ஒருவர் சிகரெட்டை அணைக்காமல் அந்த இடத்தில் கீழே போட்டதால் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெட்ரோலை பிடித்து கொண்டிருந்த 153 பேர் பரிதாபமாக உயிருடன் கருகி மரணம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 140 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.