முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா ஆகிய இருவருக்கும் நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு இன்று முறைப்படி அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு முன்னோடியாக இருந்தது இந்து மகா சபை என்ற அமைப்புதான். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர்தான் மதன்மோகன் மாளவியா. அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதன்முதலாக பிரதமர் பதவியை ஏற்ற வாஜ்பாய் தனது ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் செய்துள்ளார்.
தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.