மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அதர்வா
கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்து வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வரும் மணிரத்னம், இந்த படத்தை இவ்வருட இறுதிக்குள் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசியதாகவும் மணியின் அடுத்த கதைக்கு அதர்வா பொருத்தமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மணிரத்னம் இயக்கிய முதல்படமான ‘பகல்நிலவு’ படத்தில் அதர்வாவின் தந்தை முரளிதான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பகல்நிலவு’ படத்திற்கு பின்னர் முரளியின் மார்க்கெட் உயர்ந்ததை போல் அதர்வாவின் மார்க்கெட்டும் உயருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.